Monday, April 20, 2009

"Katrathu Tamizh" (Language - Tamizh) (2007) - Movie Review (in Tamizh and English)


(Review in English at the end of Tamizh Review)

"கற்றது தமிழ்" படத்தின் விமர்சனத்தை தமிழில் எழுதவதே தகும் என்று தோன்றியது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் ஏதோ ஒரு ஈடுபாட்டில் தமிழ் எனது முதன் முழியாக எடுத்த ஞாபகம் வந்தது. பிறகு பதினொன்றும் வகுப்பில் உருப்படியான +2 மதிப்பெண் வேண்டுமென்றால் எளிதான (இங்கு இதற்க்கு அர்த்தம் எளிதாக மனப்பாடம் செய்து சில்லறை பரிட்சியயை ஏமாற்றுவது) ஸமிஸ்க்ரிதம் எடுப்பதே நன்று என்று எல்லாரையும் போல் நானும் மாறினேன். தமிழ் படித்த பொழுது ஈடுபாட்டோடு இருந்தேன் என்று சொன்னால் அது பொய்யாகும். ஏன் என்றால் படிப்பின் மீதே எனக்கு ஈடுபாட்டு இருந்தது கிடையாது, இதில் தமிழ் வேறு அல்ல. இது எனது முதல் தமிழ் ப்ரியர்த்தனம் என்பதால் சில குறைகள் இருக்கும் என்பதை இப்போதொழுதே சொல்லி விடுகிறேன். பிறகு நமது படத்தின் கதாநாயகன் போல் "மானமுள்ள" தமிழ் மாணாக்கள் என்னை சின்ன பின்னமாக சிதைக்க போகிறார்கள்.

இந்த படம் மிகவும் முக்கியாமான மற்றும் பிரதானமான வடுவை சுட்டிக்காட்டிகரது. இன்று உள்ள நிலைமையில் தமிழில் உயர் படிப்பு என்பது சமூகத்தின் கூத்து அறையில் தரை சீட்டிக்கு டிக்கெட் வாங்குவது போல். நேராக வருங்கால முன்னேற்றத்துக்கு உயில் எழுதி விட்டு உறங்கிவிடலாம், தவிப்போடும் கொந்தளிப்போடும். அப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் பிரபாகர் (ஜீவா) ஆக படுகிறார். இயக்குனர் ராம் முதல் காட்சியில் தனது பார்வயளார்கள் குழம்பி மற்றும் வியப்பில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணுத்துக்காக, பிரபாகர் தற்கொலைக்கு முயற்சிக்கும் தருணத்தை காண்பிக்கிறார். மிகவும் தவறான செயல், பிரபாகர் மற்றும் ராம், இருவருக்கும். இந்த தருவாயில் இவருது கடந்த வாழ்க்கையை சிறு வயதில் இருந்தே ஆரம்பித்து இருந்தால், மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். அதற்க்கு பதிலாக, இன்னொரு தினசரி நடப்பான காவல் துறையின் அராஜகத்துக்கு பலியாகும் வாலிபராக காட்டியது எதிர்பார்ப்பை குறைத்தது. பின் பிரபா இந்த மான பங்கத்தின் கதறல் தாங்காமல் தற்கொலையின் கதவை தட்டி மீண்டும் தவறான தருவாயை தேர்ந்து எடுத்து தோல்வி அடைகிறார். இதெல்லாம் பிறகு தன்னுடைய கொலை பயணத்தை தொடரும் தருவாயில், இது ஒரு கடினமான மற்றும் தேவையற்ற தொடக்கம் என்று நொந்து போனேன். ஒரு படத்தின் மீட்டல் மற்றும் அதற்கேற்ற பதத்தை ராம் தர முயல்கிறார் என்பது புரிந்தது. ஆனால் அதற்க்கு ஏன் இப்படி ஒரு இருட்டின் பகிரங்க வெளிச்சம்? அதுவும் இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் தெரியாமல்?

இதேயல்லாம் பொறுத்து கொண்டு இருந்த போதிலும் கதிரின் ஒளிப்பதிவு தனியாக தெரிந்தது. இந்த தருவாயில் இசை பற்றி கூறி விடுகிறேன். பின்னர் மறக்க வாய்ப்பு உண்டு. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் இதற்க்கு மேல் ஒரு படத்திற்கு அமைப்பாக மாறாது. பின்னணி இசையிலும் மிகவும் கூர்ந்து பட்டும் படாமலும் தனது ஆற்றலை தெளிவாக செய்து இருக்கிறார். பின் கருணாஸ் தனது கேமரா முன் பயந்து கொண்டு இருக்கும் பொழுதுதான் படம் தனது நிலை கண்டுகொள்கிறது. பிரபாவின் சிறு வயது காதல், இறப்பை தனது நண்பனாக தூக்கிக்கொண்டு போவது மற்றும் சகித கடினங்கள் ஒரு மனிதனுக்கு நடப்பவை ஓய்ந்து போன கதை என்றாலும், இங்கு ஒரு வித நேர்த்தி இருக்கிறது. குறிப்பாக தனது தந்தையின் நண்பராக வரும் தமிழய்யா (அழகம் பெருமாள்) இயக்குனரின் தெளிவான புரிதல் மற்றும் அழகம் பெருமாளின் சாதரான நடிப்பும் இறப்பாக அமைகிறது. இந்த சிறு இடைவெளியில் ஒரு வித வெளிச்சத்தை காட்டிகிறார்கள். பின் மறுபடி நம் கைய்யை பிடித்து பிரபாவின் தோல்விகளின் ஊர்வலத்தை மாறி மாறி வருகிறோம். தமிழ் படிக்கறேன் என்று சொன்னாலே மிகவும் கேவலாமாக பார்க்கும் சூழ்நிலை அவரை வாடிகிறது. இதனால் வரும் தாழ்வு மனப்பான்மை அவரை ஒரு தனி மனிதனாக மாற்றுகிறது. கல்லூரி வளாகத்தில் தனது அறையில் வரும் இன்னொரு மாணவன் வளர்ந்து வந்து படத்தின் பின் பகுதியில் பிரபாவின் பொருமல் மற்றும் கோபத்திற்கு பெட்ரோலாக ஆகின்றான்.

இதில் எல்லாற்றையும் தாண்டி பிரபா ஒரு தமிழ் வாத்தியாராக பனி புரிகிறான். ஆனால் சென்னை மேன்சனில் சக உறுப்பினர்கள் மேலும் அவனது தனிமை மற்றும் அவனது இன்னல்களை ஏற்றி விடுகின்றன. இந்த உலகத்தின் இப்படி ஒரு வர்க்கம் ஏன் இவ்வளவு செழிப்பாக வாழுகிறது என்று கேள்வி கேட்டு பதிலில் எறிகிறான். இந்த தாங்க முடிய வழியில் தன்னையே இழக்கிறான். இது மெதுவாக அவனை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்கின்றது. அது அடுத்தவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பி இல்லாத இடம். தனது சீற்றத்தின் தாகம் அடைக்கும் இரத்த ஆறே அந்த இடம். அந்த பழக்கத்திற்கு அடிமை ஆகிறான். இது கேட்க மிகவும் ஆழமான மற்றும் பார்வையாளர்களை பாதிக்கும் படமாக தோன்றும். ஆம் மற்றும் இல்லை என்பதே எனது பதில்.

ஆம் - ஏன் என்றால் படத்தில் வரும் இந்த மேலோங்கிய கருத்து உண்மையே. கணிப்பொறியின் ராஜாங்கம் இந்திய வாழ்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அதிலும் தமிழ்நாட்டில் வேறு திசையில் செலுத்தி கொண்டு இருக்கிறது. இதில் பிற படிப்புகள் நசிங்கி சாகின்றன என்பது ஒப்புக்குள்ள வேண்டிய உண்மை. வரலாறு, பூகோனம், பொருளாதாரம் போன்றவை இன்று உள்ள IT யின் செம்மையான வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாது. இதனால் அந்த படிப்பிற்கு மதிப்பு இருப்பது இல்லை மற்றும் அந்த படிப்பு படிப்பவர்களை பிரதானமாக படிக்க தெரியாது தற்குளிகள் என்று பேர் சூட்டப்படிகிறது. இது இப்படத்தின் மூலம் வெளியே வந்தது நன்மையே. ஆனால் இதோட ஒரு மிகவும் கொடூரமான இன்னொரு சிந்தனையும் புகுதப்படிகறது. நன்றாக ஆடை அணிவது மற்றும் பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற உடைகள் அணிவது ஏதோ கலாச்சாரத்தின் கற்பழிப்பு என்று சொல்வது எல்லாம் மிகவும் கொச்சைத்தனம். அதிலும் அதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு பிரபா கூறுவது மிகவும் கேவலம். இதற்க்கு எல்லாம் பிறகு "I am not justifying" என்று சொல்வது படத்தின் நேர்தியயை சந்தேகப்பட சொல்கின்றது. இந்த தருவாயில் நம் பிரபாவிடமிருந்து விலகி செல்கிறோம்.

ஒரு சிலர் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்று சொல்லும் பொழுது, 1980 இல் வந்த "வறுமையின் நிறம் சிகப்பு" ஞாபகம் வருகிறது. அதில் வரும் கதாநாயகனும் தமிழ் படித்து விட்டு டெல்லியில் அல்லோல படுகிறான். அதில் அவன் படும் இன்னல்கள் அவனுடைய மனதின் நேர்மையையை சோதிக்கின்றது. அவனும் பாரதியின் வெறியன், ஆனால் அவனோட வழிகள் நமக்கு தெரிகின்றது. அவன் சமுதாயத்தை வெறுக்கிறான், ஆனால் அதற்காக தன்னுடைய வழியயை தன்னால் முடிந்த வரை நேர்த்தியாக செய்கிறான். இறுதியில் அவனோட மனதோடு ஒரு ஒப்பந்தம் போடுகின்றான். நிம்மதியாக வாழுகிறான். "கற்றது தமிழ்" முதலில் தன்னை நேராக பார்க்க பயப்படுகின்றது. அது தனது குறைகளை அடுத்தவர்கள் மீது எளிதாக போடுகின்றது. பின் அதற்க்கு இறக்கம் காற்ற கேட்கின்றது. பிரபாவை போல் மக்கள் இருக்கிறார்கள். வாழ்கை போரை கடினமாக நடத்துகிறார்கள். அவர்களும் கோபத்தோடு இருக்கிறார்கள். அதற்காக நவீன அங்கி அணிந்திருக்கும் மக்களை பார்த்து பொறாமை படுவதில் கொந்தளிப்பே மிஞ்சும்.

தனி மனிதன் தனது தனிமையில் வாடி தன்னையே இழப்பது புதிதல்ல. "Taxi Driver" யில் Travis Bickle இதே போன்ற உணர்ச்சியயை தாண்டி தத்தளிக்கறான். இங்கு தமிழ் என்றால் அங்கு சமுதாயத்தின் சாக்கடை தெருக்கள். மக்கள் சக மக்களை சதை பிண்டகலாகவும், செல்வத்தின் அடிமைகளாகவும் இருப்பதை கண்டு கொந்தளிக்கறான். அவன் மனதில் உள்ள வேதனை சமுதாயத்தால்தான், ஆனால் அதற்கும் மேல் அவனே அதற்க்கு காரணம். பிற மக்களிடம் தன் மன நிலையை பேச மறுக்கின்றான். தனக்கு என்று ஒரு கொள்கை மற்றும் நெறியை நோக்கி நடக்கின்றான். Scorsese அதை ஒரு சோகம் மற்றும் பயம் தரக்கூடிய சிற்பமாக வடிவமைக்கிறார். இங்கு பிரபாவை ஒரு சில நேரம் புரிய நேர்ந்தாலும் (முக்கியாமாக தெருவில் ஒரு ஐந்து நிமிடம் நண்பனுக்கு தேடி செல்லும் நேரம் மிகவும் சிறந்தது), அவர் ஒரு masochist ஆகத்தான் இறுதயில் காண நேருகிறது. இயக்குனர் ராம் இன்று உள்ள "கலாசார" பாதிப்பை அம்பலமாக ஆக்கி விட்டார் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. தமிழ் மாணாக்களை இது வரை தாழ்மையாக பார்த்த மக்களை பயப்பட செய்து இருக்கிறார். ஒழுங்காய் படிக்காதவர்கள் என்று தவறாக கூற படும் தமிழ் பட்டதாரிகளுக்கு இன்னொரு தவறான அபிப்ரயாம் வர செய்து இருக்கிறார். இங்கு நல்ல கதை இருக்கிறது, ஆனால் தவறான எண்ணங்கள் மற்றும் சோகத்தை ஒரு குறிக்கோளாக எடுத்து கொண்டு படமாக்கபட்டத்தின்் நிலைமை "கற்றது தமிழ்".

Review in English

I wrote a tamizh review for “Katrathu Tamizh” both as a symbol of the film’s content and also as another way to present my reviews. Of course my friend Mathi was the one who strongly recommended to write tamizh reviews and he is the patient guy who has been laboriously reading all of the postings out here. And following it up with criticisms and lauds (if there were any). I am digressing. Well, this is not a one on one translation of the tamizh review. It of course resonates the points I mentioned but due to have written more in this language, I would be more specific and might add some more things.

The tale of a lonely man comes in “Katrathu Tamizh”. Lonely man angry at the society for putting his life in the dark paths due to the studies he did. That would be the language of tamizh my native and the protagonist Prabhakar (Jeeva) does find a job of being the tamizh tutor in a school. That does not translate into a great luxurious life of TGIF parties and the irresponsibility of cherishing the financial strength at the ripe age. He suffers and suffers hard. His teaching profession earns just enough to accommodate a one room mansion and work with the simplicities of tea, cigarette and little bit of relaxing sits in a busy congested and corrupt Chennai streets. What does he do apart from teaching and developing a slow wrath towards his surrounding is unclear. He has that child hood love Aanandhi (Anjali). And for a tamil film which has passed through these phases of over written routine, this one appears fresh and mainly with a soul than a piece of melodrama. But after that it is a ritual and exhibition of Prabha’s disappointments and his failure with the society to embrace his stature of losing mind and sporadic schizophrenic.

Director Raam starts the film with the protagonist standing on the edge of his life to commit suicide which of course ends in an unsuccessful note. He wants to question this personality standing and wants us to be curious why he is there. And we learn in a short flash back of his run up of the police brutality in action followed by the burial of his self esteem. Then that further erases his recognition of his little existence getting dismantled seems to push him to the extreme of breaking free of the illness. Illness of the world wherein he is that person with the knowledge of the great language, tamizh. But that does not create any empathy for him rather confusion and wonderment since we do not really know him at that point. Once the character of Karunas as the anchor man running the camera puts the perspective, the story begins. We see how Prabha navigated his child hood with death as a companion and also as a recognition of who he is. The way he is treated in college and rest of his life as this tamizh guy being judged as this not too bright and illiterate attitude is an existing issue. What is even more bothering is that the plain straight forward shot of informing the reality of the career not being an option at all for the students in sociology, psychology, history, economics and the arts group seen as this “beggars with no choice” was strong and needed to be told.

At this moment I have to mention the beauty of Kathir’s camera work and Yuvan Shankar Raja’s music as the passion they have for this film. The director of course has the same passion but with a very misguided view. Suddenly a film which was full of this character becomes into this desperate cry for pushing depression for the heck of it. It turns into this chaotic presentation where the story takes a route unlike to the tamil cinema but very much into the other world cinema. It falls into the cliches of depression and tries really hard to extend the envelope of the extremities one has to suffer. What it really tries to do is the loneliness of a man denying or becoming to subconsciously like his suffering state. And he begins to blame the society’s partiality which has denied his financial status which indeed is true but what happens is that he loses his mind into sociopathic behaviour. A character of such darkness and dangerous capability is not something I am against. In fact you need much more emphasis to understand them and may be apply some of those in our near and dear to assist them in getting that phase of their system. What is cruelly wrong in this film of this character is that he provides an audience justifying his action. Karunas as this anchor man who starts as a fearing common person seem to be fine with the killings Prabha has done and how cheap it is to attribute the people he killed as “bad”. He becomes to have his personal justice who himself had involved in so many acts inhumanity.

I can understand why he is so vexed seeing his college room mate earning more than his capability. I can also understand his terrible frustration of attractive women floating around the Call center with their independence of wearing bold slogans. What I cannot understand is that the director taking a stand saying that these are all wrong and deserves such a treatment. So he seem to basically stamp that any one jealous of others and takes an association to the culture they like needs punishment. And the tamizh students and various other career less groups of people have the right to offend the rest of the people. While the character of Jeeva does say that “I am not justifying anything”, the film takes that position. It becomes crooked in its approach and a film which might have been at its height of integrity disintegrates rather cheaply.

Seeing “Katrathu Tamizh” obviously brought the memories of seeing K. Balachander’s “Varumayin Niram Sigappu” which is a clearer and solid film of an ambitious young man suffering from the flaws of the society’s terms. There he is bothered by the wrongness of the externality towards his righteous path. He begins to learn about his academic degree that it is far away from the realities of survival. In the end he makes a pact with himself and begins to live in his terms of happiness. It does not mean that I liked that film because it ends in happiness but mainly due to the belief in the character. Here Prabha never attains a prosperous nature even in his darkness. I did love his desperate attempt to find a five minutes friend which is more of an harassment and ragging of an innocent by passer.

The pain what Prabhakar goes through is remotely a representation of Travis Bickle in “Taxi Driver” encounters with himself. The similarities while widely different in back ground has the concept of solitude and the rejection of extending a hand for help outside. Bickle is a walking time bomb and so is Prabha even more dangerous. But I can see where Bickle is coming from and his anger but with Prabha it sticks with the screen morphed into a rage of the creator rather than a character. Director Raam adds another misconception to the tamizh graduates, serial killers. There is a great story here but not the one we see over the screen.

5 comments:

Barath said...

excellent analysis. it is true that opportunities are abundant in IT related jobs and hence studies are aligned with IT. Thus other studies are losing importance and people who still wish to pursue studies on language, history, geography, economics are considered second grade by society or at least in capable of not achieving engineering and are left with no choice but to take up arts. but as the protagonist, majority of the society try to blame the well being of successful people for even eating pizza instead of idli. This is like cheap political play done by our own political leaders. just like new avenues are analyzed and created in agriculture, arts should also get new avenues and open up for people to pursue studies without peer pressure!

Ashok said...

Yeah exactly. That part of the reason troubled me in this film. An emotion of jealousy is kind of justified for the protagonist to be what he is. I mentioned "Varumayin Niram Sigappu" for that which couple of decades back addresses the same issue in a more matured way.

But the concept of other areas not able to make a career out of it is sad. It is not as easy as IT and that is frustrating.

Aru said...

Migavum azhagaana vimarsanam !.. :).. infact i ws more thrilled by your tamil skills than your review. !

Ashok said...

Ohh. Thanks Aravind ! Feedbacks are welcome :-).

பரத் said...

நன்றாக அலசியிருக்கிறீர்கள் அஷோக். சிற்சில எழுத்துப் பிழைகள் தவிர தமிழ் நன்றாகவே இருக்கிறது. அடிக்கடி தமிழில்(தமிழ் படங்களுக்கு) எழுதுங்கள்.